நேபாளத்தில், விமான விபத்தில் கணவனை பறிகொடுத்த பெண் விமானி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அதேபோன்றதொரு விபத்தில் பலியாகியுள்ளார்.
விபத்துக்குள்ளான எதி ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தின் விமானி அஞ்சு கதிவாடா. இவர், 2006-ஆம் ஆண்டு விமான விபத்தில் தனது கணவர் பலியான பிறகு கணவரின் காப்பீட்டுத் தொகையில் கிடைத்த பணத்தின் மூலம், விமான ஓட்டியாக பயிற்சி எடுத்து, 2010ம் ஆண்டு எதி ஏர்லைன்ஸில் இணைந்து பைலட்டாக ஆனார்.
இந்நிலையில், 68 பேரைப் பலிகொண்ட விமான விபத்தில் அஞ்சுவும் உயிரிழந்துள்ளார்.