அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் லா சாலே நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குடிநீரை சுத்திகரிப்பதற்கான ரசாயனங்களை தயாரிக்கும் அந்த ஆலையில், புதன் கிழமை காலை தீப்பற்றி, வானுயர கரும்புகை எழுந்தது.
இதில் ஆலை முழுவதும் எரிந்து சேதமடைந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை நிலைமையை கண்காணித்து வருகிறது.