பிரேசிலில் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ளாத முன்னாள் அதிபர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாடாளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தினர்.
கலவரம் தொடர்பான காணொளிக் காட்சிகள் வெளியான நிலையில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே கலவரம் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு செயல்களை நிராகரிப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கூட்டாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் மூவரும் விடுத்த கூட்டறிக்கை, அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே கலவரம் தொடர்பாக அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதிபர் லூலா விவாதித்துள்ளார்.