செல்போன் ஆப் மூலம் விரும்பும் வண்ணத்தில் மாற்றிக்கொள்ளக்கூடிய காரை BMW நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
BMW i Vision Dee என பெயரிடப்பட்டுள்ள இந்த காரை, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் அறிமுகப்படுத்தினார். அமேசான் கிண்டில் போன்ற இ-புக் ரீடர்களில் பயன்படுத்தப்படும் மின்சார இங்க் தொழில்நுட்பத்தின் மூலம், உலகின் முதல் நிறம் மாறும் காரை கடந்தாண்டு BMW அறிமுகப்படுத்தியது.
iX Flow என பெயரிடப்பட்ட அந்த காரை, கருப்பு மற்றும் வெள்ளை நிற டிசைன்களில் மட்டும் மாற்ற முடிந்த நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மூலம், 32 வண்ணங்களில் மாற்றிக்கொள்ளக்கூடிய புதிய மாடல் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.