சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இந்நிலையில், ஹெனான் மாகாண தலைநகரான செங்க்சாவில், ஐபோன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது.
கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதாக கூறப்பட்ட போதிலும், ஃபாக்ஸ்கானில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் 90 % திறனில் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.