சூழலியல் மாற்றங்கள் காரணமாக ஐரோப்பாவின் குளிர்காலம் கதகதப்பாக மாறியுள்ளது.
வழக்கமான குளிர் பனிமூட்டம் போன்றவை பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டின் இறுதியில் இல்லை.
ஜனவரி மாதமும் மிதமான வெப்பத்துடன்தான் தொடங்கியுள்ளது. ஜெர்மனி தலைநகரான பெர்லினில் புத்தாண்டு அன்று வெப்ப நிலை 16 டிகிரி செல்சியசாக இருந்தது.
போலந்து தலைநகர் வார்சாவிலும் 19 டிகிரியாக பதிவானது. பிரான்ஸ் இதுவரை இல்லாத வெப்பநிலையுடன் புத்தாண்டு தினத்தை வரவேற்றது.