தென் கொரியாவில் ட்ரோன்களில் நிபுணத்துவம் வாய்ந்த ராணுவப் பிரிவு உருவாக்க இருப்பதாக அதிபர் யூன் சுக்-யோல் அறிவித்துள்ளார்.
5 வடகொரிய ட்ரோன்கள் நேற்று முன்தினம் தென் கொரியா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து யூன் சுக் இதனை அறிவித்துள்ளார்.
தலைநகர் சியோல் உட்பட தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் சுமார் 5 மணி நேரம் ட்ரோன்கள் பறந்திருப்பது, ராணுவத்தின் தயார் நிலை மற்றும் பற்றாக்குறையை காட்டுவதாக அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்த யூன் சுக், ட்ரோன் பிரிவை உருவாக்கிய பிறகு கண்காணிப்பு மற்றும் உளவுத் திறனை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்தார்.