கருப்பின பெண்ணை சுட்டுக் கொன்ற வழக்கில், டெக்சாஸ் முன்னாள் காவல் அதிகாரிக்கு 11 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜெபர்சன் என்ற கருப்பின பெண் தனது வீட்டில் உறவுக்கார சிறுவனுடன் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அந்த பெண்ணின் வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததால் திருடன் புகுந்துவிட்டதாக எண்ணி பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த தகவலின் படி, அங்கு சென்ற காவலர் ஆரோன் டீன், வீட்டின் பின்பக்கமாக நின்றிருந்துள்ளார்.
அப்போது, வெளியே ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த பெண், தனது கைத்துப்பாக்கியுடன் படுக்கையறை ஜன்னல் அருகே வந்த போது, ஆரோன் அந்த பெண்ணை சுட்டுக் கொன்றார்.
தற்காப்புக்காக ஆரோன் சுட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்ட நிலையில், பெண்ணின் கையில் அவர் துப்பாக்கியை பார்த்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதையடுத்து, அவருக்கு 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.