2022ம் ஆண்டிற்கு விடையளித்து, 2023ம் புத்தாண்டை வரவேற்கும் வகையில், ஐரோப்பாவிலுள்ள ருமேனியாவின் புச்ராஸ்ட் தெருவில் நடைபெற்ற நாட்டுப்புற விழாவில், விலங்குகள் போன்று உடையணிந்து பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஆண்டு இறுதி நாட்களில் பாரம்பரியமாக நடத்தப்பட்டுவரும் இந்த விழாவில், முந்தைய காலங்களில் கரடிகளுடன் மக்கள் பங்கேற்று வந்த நிலையில், தற்போது தலை முதல் கால் வரை கரடி போன்ற ஆடைகளை அணிந்துக்கொண்டு, தெருக்களில் டிரம்ஸின் தாளத்திற்கும், விசில்களின் ஒலிக்கும் நடனமாடினர்.
கிராமங்களில் மாறுவேடமிட்டுக்கொண்டு வீடு வீடாக ஊர்வலமாகச் செல்வதையும் ருமேனியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.