பிலிப்பைன்ஸ் நாட்டில் மினிபஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டத்தில் 5 வயது சிறுமி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ரிசால் மாகாணத்தில் 25 பயணிகளுடன் சென்ற மினிபஸ், ஆற்றை கடந்த போது திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு ஆற்றின் நடுவே சிக்கியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.