உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த மேலும் 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்த தொகுப்பில் அதிக எண்ணிக்கையில் ஹிமார்ஸ் எனப்படும் அதிநவீன ஏவுகணை அமைப்புகள், பல்வேறு வகையான பீரங்கி குண்டுகள், கவச எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட திறன்மிக்க ஆயுதங்கள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதலால் உருக்குலைந்த உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ராணுவம், பொருளாதார ரீதியாக உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ரஷ்யா உடனான போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு இதுவரை 19.3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.