கத்தாரில் கால்பந்தை மையமாகக்கொண்டு உலகின் மிகப்பெரிய ஓவியம் வரையப்பட்டுள்ளது.
9 ஆயிரத்து 652 சதுர மீட்டரில், கால்பந்து மைதானத்தை உள்ளடக்கும் அளவுக்கு இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. 3 ஆயிரம் லிட்டர் பெயிண்ட் பயன்படுத்தி 150 பிரஷ்கள் மூலம் எமத் சலேஹி என்பவர் வரைந்த இந்த ஓவியம் கின்னஸ் சாதனை புஸ்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கிட்டத்தட்ட 5 மாதங்கள் இதற்கு செலவிட்டதாகவும், நாளொன்றுக்கு 18 மணி நேரம் பணியாற்றியதாகவும் சலேஹி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பிரிட்டனை சேர்ந்த சச்சா ஜாஃப்ரி 1,595 சதுர மீட்டர் பரப்பளவில் வரைந்திருந்ததே மிகப்பெரிய ஓவியமாக இருந்தது.