கூகுள் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.
73-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருது சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படும் மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி சான் பிரான்சிஸ்கோவில் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
இந்த மகத்தான கவுரவத்திற்காக இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், இந்தியா என்னில் ஒரு பகுதி, நான் எங்கு சென்றாலும் என்னுடன் எடுத்துச் செல்கிறேன் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.