சீனாவில் இருந்து 3 விண்வெளி வீரர்களுடன் நேற்று புறப்பட்டு சென்ற சென்சோ 15 விண்கலம் வெற்றிகரமாக இன்று காலை விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.
வடமேற்கு சீனாவில் உள்ள ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து நேற்று இரவு 11-08 மணிக்கு புறப்பட்ட இந்த விண்கலம் 6 மணி நேரத்துக்கு பின்னர் விண்வெளிநிலையத்தை எட்டியது. வெற்றிகரமாக விண்வெளி நிலையம் சென்றடைந்த 3 வீரர்களுக்கும் ,அங்கிருந்த சீன வீரர்கள் அரவணைப்புடன் வரவேற்பு அளித்தனர்.
நாசா விண்வெளி நிலையத்துக்கு பின் பூமியின் சுற்றுப்பாதையில் சீனர்கள் 2-வது நிரந்தர தங்கும் நிலையத்தை நிர்மாணித்து வருகின்றனர். இந்த பணிக்காக ஏற்கனவே சென்சோ 14 விண்கலம் மூலம் விண்வெளி சென்று தங்கியுள்ள வீரர்கள், ஒருவாரத்தில் பூமிக்கு திரும்புவார்கள் என்றும் சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.