சீனாவில் பொதுமுடக்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததை அடுத்து, பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உரும்கியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து நேரிட்ட சம்பவம், போராட்டங்களுக்கு காரணமாக அமைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அக்கட்டடம் பகுதியளவு பூட்டப்பட்டிருந்ததால், மக்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, போராட்டம் நடத்தப்பட்டது. சீனா பல ஆண்டுகளாக கண்டிராத வகையில் போராட்டங்கள் வெடித்தன.
இதன் விளைவாக சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் போராட்டம் நடைபெறாத வண்ணம், போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.