உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்திலுள்ள குடியிருப்புகள் மீது ஒரே வாரத்தில் ரஷ்ய படைகள் 258 முறை தாக்குதல் நிகழ்த்தியதாக, அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
கெர்சன் நகரிலிருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள், நிப்ரோ ஆற்றின் மறு கரையிலிருந்து ஏவுகணைகளை வீசிவருவதாகவும், அதில் மிகோலைவ் நகருக்கு தண்ணீர் அனுப்பும் நீரேற்றும் நிலையம் சேதமடைந்துள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டினார்.