2024 ஆம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் அதேக் கட்சியைச் சேர்ந்த ரான் டிசாண்டிஸ் அவருக்கு போட்டியாளராக இருப்பார் என்று கூறப்படுறது.
இந்நிலையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில், பைடனுக்கு வாக்களித்த நிலையில் பேச்சு சுதந்திரத்தில் ஏமாற்றம் அடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.