கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின்போது, ஈரான் அரசுக்கு எதிராக அந்நாட்டு ரசிகர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த மாசா அமினிக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை, அரசுக்கு ஆதரவானவர்கள் சூழ்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான தங்களது முதல் போட்டியின்போது தேசியகீதம் பாடாமல் இருந்த ஈரான் வீரர்கள், வேல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டிக்கு முன், தேசிய கீதம் பாடினர்.