அதிகனமழையால், சவுதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வியாழக்கிழமை ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.
மழையின் காரணமாக நேற்று ஜெட்டாவில் விமானப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. மழை பாதிப்புகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கருதி மெக்கா யாத்திரை செல்லும் முக்கிய சாலை மூடப்பட்டு, பின்னர் மழை நின்றதும் திறக்கப்பட்டது.