கிரீஸ் கடற்பகுதியில் மீன்பிடி படகுகளில் தத்தளித்துக்கொண்டிருந்த நூற்றுகணக்கான புலம்பெயர்ந்தவர்களை அந்நாட்டு கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
கிரீஸின் கிரீட் தீவில் பலத்த காற்றில் சிக்கி இரண்டு படகுகள் தத்தளித்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த கிரீஸ் கடற்படையினர் படகுகளில் இருந்த 400-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களை மீட்டனர்.
அவர்கள் லிபியாவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்டவர்கள் கிரீஸின் தெற்கு கடலோர நகரமான பேலியோச்சோராவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.