போலந்தில் இரண்டு பேர் உயிரிழப்பிற்கான காரணமான ஏவுகணை, ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்டிருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் எல்லையில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தங்களது பிரெவோடோவ் (Przewodow) என்ற கிராமத்தில் ஏவுகணை விழுந்ததாகவும், அவை பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையாக இருக்க வாய்ப்பு இருந்தாலும், அதனை யார் அதை ஏவியது என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்றும் போலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஏவுகணை விழுந்த பாதையின் அடிப்படையில் அவை ரஷ்யாவில் இருந்து ஏவியிருக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.