அமெரிக்காவில் 2024- ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அந்த நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
ப்ளோரிடா மாகாணத்தில் பேசுகையில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2016- ல் நடைபெற்ற தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு அதிபராக வெற்றிப் பெற்ற டிரம்ப்,பிறகு 2020- ஆம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.
இப்போது 2024- ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்து உள்ள டிரம்ப் முதலில் அவருடைய குடியரசுக் கட்சி உறுப்பினர்களினால் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அந்தக் கட்சியில் ப்ளோரிடா மாகாண ஆளுநர் ரான் டிசாண்டிஸ் அவருக்கு போட்டியாளராக இருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.