டுவிட்டர், ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், அமேசான் நிறுவன வரலாற்றில் இது மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக நஷ்டம் அதிகரிப்பதால், ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகளவில் அமேசான் நிறுவனத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர்.