ரஷ்யாவிடமிருந்து இந்தியா எவ்வளவு கச்சா எண்ணெய் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா அமெரிக்கா இடையிலான பொருளாதார மேம்பாடு தொடர்பான கூட்டத்தின் இடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் ஐரோப்பிய யூனியன் ரஷ்யா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி ஏற்றுமதிக்குத் தடை விதித்த பின்னர் இப்போது விற்பனை செய்வது போல கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யாவால் செய்ய முடியாது என்று கூறினார்.
இந்தியாவும் சீனாவும் தற்போது அதிகளவில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் ஆகும்.