ட்விட்டர் பங்குகளை வாங்கிய கையோடு பாதியளவு ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய எலன் மஸ்க் எஞ்சியுள்ள ஊழியர்களுக்கு வாரத்தில் 80 மணி நேரம் வேலை இலவச உணவு ரத்து போன்ற கெடுபிடிகளை விதித்துள்ளார்.
ஊழியர்கள் மத்தியில் பேசிய எலன் மஸ்க், மேலும் நிதி ஆதாரத்தைப் பெருக்காமல் போனால் நிறுவனம் திவால் ஆவதைத் தவிர்க்க முடியாது என்று எச்சரித்தார்.
கோவிட் காலத்தையொட்டி வீட்டில் இருந்தபடியே பணியாற்றும் சலுகைகள் போன்றவற்றையும் எலன் மஸ்க் ரத்து செய்துள்ளார்.