உலகின் பல்வேறு இடங்களில் இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணம் தென்பட்டது.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணி வரை நிகழ்ந்த சந்திர கிரகணம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்பட்டது.
அதேபோல், இந்தியாவில் பாட்னா, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களிலும் சந்திர கிரகணத்தை மக்கள் கண்டு வியந்தனர்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் சந்திர கிரகணம் தென்படாத நிலையில், பருவமழையால் மழை பெய்ததால் கிரகணத்தை சரியாக காண முடியாத சூழல் ஏற்பட்டதாக பிர்லா கோளரங்கத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.