கென்யா நாட்டில் நிலவும் வறட்சியினால் 205 யானைகள் இறந்துள்ளன.
40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அங்கு வறட்சி நிலவுவதால் அம்போசெலி, சம்புரு, டைட்டா டிவிட்டா பகுதிகளில் உள்ள காடுகளில் யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.
கடந்த 9 மாதத்தில் 205 யானைகள் இறந்ததாக கென்யா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இறந்த குட்டியை தாய் யானை பரிதவிப்போடு பார்க்கும் காட்சி, எழுந்து நிற்க முடியாத யானையை வனத்துறையினர் கயிறு கட்டி இழுத்த போதும் அந்த யானை நிலைகுலைந்து கீழே விழுவது, இறந்து கிடக்கும் யானைகள் குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
காட்டுப் பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர், உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கென்ய அரசு தெரிவித்துள்ளது.