தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்தனர்.
இட்டாவோன் பகுதியில் நடைபெற்ற ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். பிரதான வீதியை ஒட்டிய குறுகிய சந்துகளில் முண்டியடித்து கொண்டு சென்றபோது ஒருவரை ஒருவர் கீழே தள்ளி விழத் தொடங்கினர். நெருக்கமுடியாத அளவுக்கு நிலைமை மோசமானதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மயங்கி சுருண்டு விழுந்தனர்.
150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு நீக்கிய நிலையில், இக்கோரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2014-ஆம் ஆண்டு படகு மூழ்கிய விபத்தில் சிக்கி 304 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த கோர சம்பவத்தை நினைவு கூறுவதாக ஹாலோவீன் கூட்ட நெரிசல் விபத்து இருக்கிறது.