டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலன் மஸ்க் இன்று தன் வசப்படுத்தினார்.
டிவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கிய எலன் மஸ்க் இந்திய வம்சாவளியினரான தலைமை அதிகாரி பராக் அகர்வால், மற்றும் தலைமை நிர்வாகி விஜயா காடே ஆகியோரை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டரை ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக்கப்போவதாகவும் பணம் சம்பாதிக்க அதனை தாம் வாங்கவில்லை என்றும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் யாரும் எந்த விளைவுகளையும் சந்திக்காமல் எதை வேண்டுமானாலும் சொல்லி விட முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.