அமெரிக்காவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான மிசிசிபி ஆற்றின் நீர் மட்டம் வரலாறு காணாத வறட்சி காரணமாக தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.
அமெரிக்காவின் 2வது மிக நீளமான ஆறு என்று அழைக்கப்படும் மிசிசிபி ஆறு Minnesotaவில் இருந்து Mississippi வரை சுமார் 2ஆயிரத்து 350மைல் நீளத்துக்கு பாய்கிறது.
மத்திய அமெரிக்கப் பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் இந்த ஆற்றின் நீர்மட்டம் மிகவும் குறைந்து நிலையில் உள்ளது. இதனால் ஆற்றின் வழியாக நடைபெறும் சரக்கு கப்பல் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எண்ணெய், விவசாயம், கட்டுமானப் பொருட்கள் விநியோகம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.