சீன அதிபர் பதவிக்கு, மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் தேர்வான நிலையில், தங்கள் நாட்டின் மீது இராஜதந்திர ரீதியான தாக்குதல்களை சீனா அதிகப்படுத்த வாய்ப்புள்ளதாக, தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தைவான் மீதான சீனாவின் ராணுவ மற்றும் ராஜாங்க ரீதியான அழுத்தம் அதிகரிக்கும் எனவும், தைவானின் நட்பு நாடுகளை கவர்ந்திழுக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாகவும் குறை கூறினார்.
மேலும், பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள 14 நாடுகள் மட்டுமே, தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதாகவும், 6 நாடுகள் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.