டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான தொழிலதிபர் எலன் மஸ்க், வெள்ளிக்கிழமை மாலைக்குள் டிவிட்டர் ஒப்பந்தத்தை 44 மில்லியன் டாலர் உடன்படிக்கையில் முடித்துவிட வேண்டும் அல்லது சட்டரீதியான வழக்கை சந்திக்க நேரிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
டிவிட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்து உண்மையான தரவுகளை பொதுவெளியில் ஆதாரத்துடன் வழங்காத வரை டிவிட்டர் ஒப்பந்தம் முன்னோக்கி நகராது என தெரிவித்த எலான் மஸ்க் ஜூலை மாதம் ஒப்பந்தத்தில் இருந்து பின் வாங்கினார். இதனையடுத்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் மீது தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது. ' போலி கணக்குகள் விவரம் வேண்டும்' என்ற பெயரில் பொய்யாக காரணம் காட்டி, இந்த ஒப்பந்தத்தில் இருந்து அவர் விலக முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.