உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பேஸ்புக் வளைதளத்தை நிர்வாகிக்கும் மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டவர்கள் ரஷ்யர்களுக்கு எதிராக வெளியிடுடு வன்முறைத் தகவல்களை பேஸ்புக் அனுமதிக்கிறது என்பது குற்றச்சாட்டாகும்.
அந்த நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் விதித்து இருந்த தடையை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்ய அரசு சேர்த்து உள்ளது.