ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தடையால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை ஹங்கேரி வழியாக செர்பியாவிற்கு குழாய்கள் மூலமாக அனுப்ப இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
வழக்கமாக குரேஷியா வழியாக குழாய் மூலம் கச்சா எண்ணெய் அனுப்பப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் குரேஷியா உள்ளதால் அந்நாட்டு வழியாக எரிபொருளைக் கொண்டு செல்ல முடியாததால் செர்பியா உடன் இந்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக ஹங்கேரி தெரிவித்துள்ளது.
முன்னதாக ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதற்கு ஐரோப்பிய யூனியனுக்கு ஹங்கேரி தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தது.