இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்தா ராஜபக்சே பதவி விலகிய பிறகு முதன்முறையாக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அவரும் அவர் தம்பியான முன்னாள் அதிபர் கோத்தபயாவும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் கல்லுதராவில் நேற்றுநடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பேரமுனா கட்சியின் பொதுக்கூட்டத்தில் 77 வயதான மகிந்தா ராஜபக்சே கலந்து கொண்டார்.
அப்போது இலங்கையின் தற்போதைய அதிபர் பெயரைக் கூறும் போது அவருக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. உடனடியாகத் தமது தவறைத் திருத்திக் கொண்ட அவர் அதிபர் ரணில்விக்ரமசிங்கே அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.