இந்தாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரசான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான ஆனி எர்னாக்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எ வுமன்ஸ் ஸ்டோரி, எ மேன்ஸ் பிளேஸ், சிம்பிள் பேசன் உள்ளிட்ட எர்னாக்ஸ் எழுதிய புத்தகங்கள் புகழ்பெற்றவையாகும்.
பாலினம், மொழி உள்ளிட்டவற்றில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் தொடர்பாக எர்னாக்ஸ் தொடர்ந்து எழுதி வந்ததாகவும், 30க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை அவர் இயற்றியுள்ளதாகவும் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.