பாகிஸ்தானில் ஒரு உணவகத்தில் குடிநீருக்கு பதில் ஆசிட் வழங்கப்பட்ட விவகாரத்தில், உணவக மேலாளர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் 27ம் தேதி முகமது அடில் என்பவர் தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாட பொயட் என்ற உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்களுக்கு தண்ணீர் பாட்டிலில் ஆசிட் வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தண்ணீர் என நினைத்து ஆசிட்டை பருகிய இரண்டரை வயது குழந்தை கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆசிட்டால் கைக் கழுவிய அடில்லின் உறவுக்கார சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முஹம்மது அடில் அளித்த புகாரின் பேரில், உணவக மேலாளர் மற்றும் 5 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், உணவக மேலாளரை கைது செய்தனர்.