இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் எப் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் ஜிலிங்கர் ஆகியோர் நோபல் பரிசை பெறுவதாக ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
போட்டான் எனப்படும் ஒளியணு தொடர்பான சோதனைக்கும், குவாண்டம் தகவல் அறிவியல் ஆராய்ச்சிக்கும் அவ்விஞ்ஞானிகள் கவுரவிக்கப்படுவதாக நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது. அவர்களின் சோதனை, குவாண்டம் தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.