மகாத்மா காந்தியின் பிறந்தநாள் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படும் நிலையில் உலக மக்கள் அனைவரும் மகாத்மா காந்தி காட்டிய அமைதி, மரியாதையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
ட்விட்டரில் அவர் வெளிட்டுள்ள செய்தியில், மகாத்மா காந்தியின் பிறந்தநாளுடன் அமைதி, மரியாதை மற்றும் கண்ணியத்தின் மதிப்புகளை கொண்டாடுவதாகவும், இதனைப் பின்பற்றி கலாச்சாரங்கள் மற்றும் எல்லைகளைக் கடந்து செயல்படுவதன் மூலம் இன்றைய சவால்களை நாம் தோற்கடிக்க முடியும் என்றும் குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.