அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை, வெள்ளை மாளிகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்து பேசினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, ஜனநாயக தேசியக் குழுவின் மகளிர் தலைமை மன்ற நிகழ்ச்சியில் கமலா ஹாரிசை சந்தித்த பிரியங்கா, கருக்கலைப்பு சட்டம், ஆயுத மறுசீரமைப்பு மசோதா உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி கலந்துரையாடினார்.