உக்ரைனுக்கு மேலும் 12 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
போரில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவியை அளித்து வருகின்றன. உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷ்யா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அதிபர் ஜோ பைடனின் வேண்டுகோளை ஏற்று போரினால் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் இராணுவ உதவிக்கு உதவும் வகையில் மேலும் 12 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்க அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.