வடகொரிய அரசு ஊடகத்தில் காட்டப்பட்ட சிறுமி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-னின் மகளாக இருக்க வாய்ப்பிருப்பதாக தென்கொரியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா நிறுவன தின நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி நடைபெற்றது. இதில் சிறுமி ஒருவர் பிற குழந்தைகளுடன் ஆடி பாடியதையும், அதை அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மனைவி Ri Sol Ju ஆகியோர் மிகவும் ரசித்ததோடு, கடைசியில் சென்று பாராட்டியதையும் வடகொரிய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்டியது.
மற்ற சிறுமிகள், தலைமுடியை ஜடை பின்னியிருக்க அந்த சிறுமி மட்டும் அதை செய்யவில்லை. அதிபர் மகள் என்பதாலேயே சலுகை அளிக்கப்பட்டதாக சீன நிபுணர்களை மேற்கோள்காட்டி, தென்கொரிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
இதையடுத்து கிம் ஜாங் உன் மகளா அந்த சிறுமி என்று விசாரித்து வருவதாக தென்கொரிய Unification அமைச்சகம் தெரிவித்துள்ளது.