கையெழுத்திடும் சம்பிரதாயங்களின் போது பேனாவில் இருந்து மை கசிந்ததால், கோபமடைந்த பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸை சமாதானப்படுத்தும் வகையில், அவரது நலன் விரும்பி ஒருவர் பேனாவை பரிசாக வழங்கினார்.
வடக்கு அயர்லாந்திலும், ஹில்ஸ்போரோ அரண்மனையில் பார்வையாளர் புத்தகத்தில் கையெழுத்திடும் போதும், மன்னர் சார்லஸ் பயன்படுத்திய பேனாக்களில் இருந்து மை கசிந்தது.
கை விரல்களில் மை படிந்ததால் கோபமடைந்த மன்னர் சார்லஸ், இந்த பேனாவை வெறுக்கிறேன் என்று குறிப்பிட்டார். இதனிடையே, கார்டிஃப் நகருக்கு வந்த மன்னர் சார்லஸுக்கு அங்கு திரண்டிருந்தவர்களில் ஒருவர் பேனாவை பரிசாக அளித்தார்.
ஆரம்பத்தில் குழப்பமடைந்த மன்னர் சார்லஸ், பின்னர் புரிந்துக்கொண்டு சிரித்தபடியே அந்த பேனாவை ஆர்வத்துடன் வாங்கி பார்த்தார். உடனே, கூடியிருந்தவர்கள் கரவொலி எழுப்பி மன்னரை உற்சாகப்படுத்தினார்கள்.