ராணி இரண்டாம் எலிசபெத் உருவம் கொண்ட பிரிட்டிஷ் வங்கி நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லும் என இங்கிலாந்து வங்கி அறிவித்துள்ளது.
ராணியின் உருவம் பதித்த தற்போதைய நாணயத்தாள்கள் செல்லத்தக்கவை எனவும், ராணியின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு நாணயத்தாள்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பேங்க் ஆஃப் இங்கிலாந்து அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ராணி எலிசபெத் காலமானதையடுத்து அவரது உருவம் பதித்த நாணய நோட்டுகள் கூடிய விரைவில் புழக்கத்தில் இருந்து நீக்கி, அதற்கு பதிலாக புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட சார்லஸ் மன்னரின் புகைப்படம் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.