இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா வகைகளையும் எதிர்த்து அழிக்கக் கூடிய ஆன்டிபாடியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனாவின் புதிய உருமாற்றங்களை எதிர்த்துப் போராட பல்வேறு பூஸ்டர் தடுப்பூசிகளின் தேவை எழுந்துள்ளதால், பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து SP1-77 எனப்படும் எதிர்ப்பு ஆன்டிபாடியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில் இருப்பதாக கூறும் விஞ்ஞானிகள், நம்பிக்கைக்கு உரியதாகத் தோன்றினால் புதிய மோனோக்ளோனல் ஆன்டிபாடி தயாரிப்புகள் மற்றும் தடுப்பூசியின் அடிப்படையை உருவாக்கலாம் என்று தெரிவித்தனர்.