பிரிட்டனின் பொருளாதாரம், மின்சார ஆற்றல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் முழு கவனம் செலுத்தப்போவதாக புதிதாகப் பதவியேற்ற பிரதமர் லிஸ் டிரஸ் தமது முதல் பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றவுடன், போரிஸ் ஜான்சன் தமது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து ராணி இரண்டாம் எலிசபெத்தால் லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஸ்காட்லாந்து சென்று ராணியை சந்தித்துவிட்டு பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவர் பேசினார்.
அப்போது பிரிக்சிட், அயர்லாந்து எல்லையில் அகதிகள் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை கோடிட்டு காட்டிய லிஸ் டிரஸ், பிரிட்டனை முன்னேற்றப் பாதையில் வழிநடத்தப் போவதாக உறுதியளித்தார்.