கொலம்பியாவில் போலீஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் எட்டு போலீசார் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஹுய்லா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது, நாட்டின் அமைதிக்கு எதிரான நாசவேலை என்று அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் செயல்படும் கிளர்ச்சி அமைப்பான தேசிய விடுதலை ராணுவம், இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.