முன்னாள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நள்ளிரவில் இலங்கைக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்வு காண முடியாததால், ஆத்திரம் அடைந்த பொது மக்கள் தீவிரமாகப் போராட்டம் நடத்தினர்.
அதிபர் பதவி விலகக் கோரி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திய நிலையில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி நாட்டை விட்டு அவர் தப்பிச்சென்ற ராஜபக்சே வெளிநாட்டில் இருந்து தமது இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
மாலத்தீவு மற்றும் சிங்கப்பூர் வழியாக தாய்லாந்தில் குடிபுகுந்த அவர் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து நேற்றிரவு பாங்காக்கில் இருந்து கொழும்பு திரும்பியுள்ளார்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இலங்கை வந்த அவரை அமைச்சர்கள் மற்றும் ஆளும்கட்சி எம்.பி.க்கள் சிலர் வரவேற்றனர். பலத்த பாதுகாப்புடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.
கொழும்பு அருகே விஜேரமா மாத்வா எனுமிடத்தில் உள்ள அரசு மாளிகையில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.