அர்ஜெண்டினாவில் இருசக்கர வாகனத்தில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற டெலிவரி பாய், அவ்வழியாக வந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
சனிக்கிழமை இரவு Quilmes நகரில் உள்ள தண்டவளத்தில் ரயில் வருவதை குறிக்கும் சிக்னல் போடப்பட்டிருந்ததால், ரயில்வே கேட்டுக்கு முன் ஒரு வேன் காத்திருந்தது.
வேனை முந்திக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 23 வயதான டெலிவரி பாய், தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, கண்ணிமைக்கும் நொடியில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதில் இருசக்கர வாகனம் சுக்கு நூறாக நொறுங்கிய நிலையில், உயிர் தப்பிய டெலிவரி பாய் இரு கால்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.