கானா நாட்டின் அக்ரா நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்த ஒரு நபரை சிங்கம் கொன்றது.
அந்த உயிரியல் பூங்காவில் இரண்டு குட்டிகளுடன் சிங்க ஜோடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. நேற்று உயிரியல் பூங்காவை காண வந்த ஒரு நபர் திடீரென சிங்கங்கள் இருந்த பகுதிக்குள் பாதுகாப்பு வேலியை தாண்டி குதித்தார்.
உள்ளே குதித்த அந்த நபரை சிங்கம் ஒன்று கடித்துக்குதறி கொன்றது. தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அந்த நபர் நுழைந்தது எப்படி என்பது குறித்து பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.